தேசிய தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வு (SET) மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு (SLET) ஆகியவையே அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச அளவுகோலாக இருக்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனத்திற்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்து ஜூன் 30 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிமுறைகளின் அறிவிப்பு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்: கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி; ஐ.ஐ.டி மெட்ராஸ் சூப்பர் முயற்சி
UGC இன் அறிவிப்பின்படி, "அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கான உதவிப் பேராசிரியர் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச அளவுகோல் நெட்/ செட்/ ஸ்லெட் ஆகும்." இந்த திருத்தமானது UGC இன் முந்தைய துணை ஒழுங்குமுறையை மாற்றுகிறது. இந்தத் திருத்தம் உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேவையான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதி செய்வதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வித் தரத்தை பராமரிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
யு.ஜி.சி தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி பேராசிரியராக பணி நியமனம் செய்வதற்கான பி.எச்.டி தகுதி விருப்பத்தேர்வாக இருக்கும் என்று தகவல் பகிர்ந்துள்ளார்.
திருத்தப்பட்ட விதிமுறைகள் ஆட்சேர்ப்பு செயல்முறையை சீரமைப்பதிலும், தகுதியானவர்கள் மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று யு.ஜி.சி கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil