NIRF 2023 சிறந்த வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்லூரிகள்: ‘2023க்கான இந்திய தரவரிசை அறிக்கை’யை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று வெளியிட்டார். இதற்கு முன் நான்கு பிரிவுகள் மற்றும் ஏழு பாட களங்கள் இருந்தன, வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் முதல் முறையாக ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
Advertisment
அறிமுகமான ஆண்டில், புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 83.16 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.
70.45 மதிப்பெண்களுடன் ஹரியானாவின் கர்னாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்- தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம் 65.98 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 63.68 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்தன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 61.71 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
இசத்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆறாவது இடத்தையும், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஏழாவது இடத்தையும் பிடித்தன. எட்டாவது இடத்தை பந்த்நகரில் உள்ள ஜி.பி பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெற்றது.
முதல் 10 இடங்களில் கடைசி இரண்டு இடங்களை காஷ்மீரின் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்ரீநகர் மற்றும் ஹிசாரில் உள்ள சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகம் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தைப் பிடித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil