Advertisment

NIRF ranking : லிஸ்டில் இடம்பெற்ற நம்ம ஊர் பல்கலைக்கழகங்கள் இவைதான்!

NIRF ranking 2020 : 2020ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NIRF ranking

NIRF ranking

NIRF ranking : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தினை அளவிடும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது.

Advertisment

ஆண்டுதோறும் சிறந்த பல்கலைகழகம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள், கல்லூரிகள், நிர்வாகவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவைகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வகைப்படுத்துகிறது.கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எப்) வெளியிடப்பட்டு வருகிறது.11 அம்சங்களை கொண்டு தரவரிசை பட்டியல் உருவாக்கப்படும்.

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.

2020-ம் ஆண்டுக்காக உயர்கல்வி தரவரிசை போட்டிக்காக தமிழகத்தில் இருந்து 260 உட்பட நாடு முழுவதும் 1,667கல்வி நிறுவனங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

NIRF ranking 2020: முதலிடத்தில் சென்னை ஐஐடி!

பட்டியலில் வெளியான டாப் 10 கல்வி நிறுவனங்கள்

1.சென்னை ஐஐடி

2. பெங்களூரு ஐஐஎஸ்சி

3. டில்லி ஐஐடி

4. மும்பை ஐஐடி

5. காரக்பூர் ஐஐடி

6. கான்பூர் ஐஐடி

7. கவுகாத்தி ஐஐடி

8. டில்லி ஜேஎன்யு

9. ரூர்கீ ஐஐடி

10.பனாரஸ் இந்து பல்கலை

சென்னை ஐஐடி தேசிய அளவில் முதலிடம்

2019-ம் ஆண்டுக்கான தரவரிசையிலும் சென்னை ஐஐடிதான் முதலிடத்தில் இருந்தது. 2018-ல் 10-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலை. 2019-ல் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பின்தங்கி தற்போது 20-வது இடத்தில் உள்ளது.

பட்டியலில் இடம்பெற்ற தமிழக பல்கலைகழகங்களின் லிஸ்ட்

1. NIRF rank -1 சென்னை ஐஐடி

2. NIRF rank - 21 பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்

3. NIRF rank - 41 சென்னை பல்கலைக்கழகம்

4. NIRF rank - 64 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்

5. NIRF rank - 84 மதுரை காமராஜர் பல்கலைகழகம்

6. NIRF rank - 77 திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம்

7. NIRF rank - 13 அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர்

8. NIRF rank - 24 திருச்சி என்ஐடி

9. NIRF rank - 28 வேலூர் விஐடி

10. NIRF rank - 61 சென்னை சத்தயபாமா பல்கலைக்கழகம்

11. NIRF rank -- 86 பிஎஸ்ஜி கோவை

12.  NIRF rank - 58 எஸ்.ஆர்.எம்

பட்டியலில் டாப் 10 பல்கலைக்கழகங்கள்

1.பெங்களூரு ஐஐஎஸ்சி

2. டில்லி ஜேஎன்யு

3. பனாரஸ் இந்து பல்கலை

4. அமிர்தா விஸ்வா வித்யதீபம், கோவை

5. ஜாதவ்பூர் பல்கலை, கோவை

6. ஐ தராபாத் பல்கலை

7. கோல்கட்டா பல்கலை

8. உர்நிலை கல்விக்கான மணிப்பால் அகாடமி , மணிப்பால்

9. சாவித்ரி புலே புனேபல்கலை, புனே

10. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை, டில்லி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Iit Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment