தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 213 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், ஜூனியர் ஓவர்மேன், ஜூனியர் சர்வேயர், சிர்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: தபால் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
Junior Overman (Trainee)
காலியிடங்களின் எண்ணிக்கை: 51
கல்வித் தகுதி: Diploma in Mining or Mining engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 31,000 – 1,00,000
Junior Surveyor (Trainee)
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வித் தகுதி: Diploma in Mining (or) Diploma in Mining engineering (or) Diploma in Mine Surveying (or) Diploma or Degree in Civil Engineering (or) National Trade Certificate (NTC) in Surveying படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 31,000 – 1,00,000
Sirdar
காலியிடங்களின் எண்ணிக்கை: 147
கல்வித் தகுதி: Diploma in Mining or Mining engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 26,000 – 1,10,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2023. இந்தப் பணியிடங்களுக்கான கடைசி தேதி கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.