தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 08.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில் இண்டஸ்ட்ரீயல் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: நீதிமன்ற வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!
Industrial Trainee specialised mining="" equipment="" (sme)="" operations="">
காலியிடங்களின் எண்ணிக்கை: 238
கல்வித் தகுதி: Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 37 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஊக்கத்தொகை: முதல் வருடம் ரூ. 18,000, இரண்டாம் வருடம் ரூ. 20,000, மூன்றாம் வருடம் ரூ. 22,000
Industrial Trainee (Mines & Mines Support Services)
காலியிடங்களின் எண்ணிக்கை: 262
கல்வித் தகுதி: ITI - Fitter or Turner or Electrician or Welding or MMV or Diesel Mechanic or Tractor Mechanic or Civil or Foundry or Cable Jointing Trades with NAC Certification படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 37 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஊக்கத்தொகை: முதல் வருடம் ரூ. 14,000, இரண்டாம் வருடம் ரூ. 16,000, மூன்றாம் வருடம் ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.07.2023.
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/02-2023-pap.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil