நடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா? அடுத்த பிளான் என்ன?

ஜேஇஇ மெயின்: ஜனவரி மாத தேர்வில் சாதிக்க முடியவில்லை என்றால் மனம் இழக்காதீர்கள், நீங்கள் வெல்லக்கூடிய பல கோட்டைகள் உங்கள் முன்னுள்ளன.

jee main, Cbse 12 board Exam

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ மெயின்) இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியவில்லை என்றால் மனம் இழக்காதீர்கள், நீங்கள் வெல்லக்கூடிய பல கோட்டைகள் உங்கள் முன்னுள்ளன. 2.4 லட்சம் தேர்வர்கள் மட்டுமே ஜே.இ.இ.- அட்வான்ஸ்டு  தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர், மீதமுள்ளவர்கள் மாநில அளவிலான கல்லூரிகளில் சேரயிருக்கின்றானர்.

Top Engineering Entrance Exams: ஜேஇஇ தேர்வைத் தவிர்த்து, இந்த 5 தேர்வையும் யோசித்து பாருங்களேன்

இரண்டாவது முயற்சியில் ஈடுபடுங்கள்: ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில்  (ஜேஇஇ மெயின்) இன்னும் உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நீங்கள் நினைத்தால், ஏப்ரல் மாதத்தில்  நடக்கயிருக்கும் இரண்டாவது முயற்சிக்கு விண்ணப்பிக்கவும்.

ஏப்ரல் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் பிப்ரவரி 7 முதல் தொடங்கும். jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணபிக்கலாம். எவ்வாறாயினும், ஜனவரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் ஏப்ரல் அமர்வுக்கு விண்ணப்பிக்க திட்டமிடுவார்கள்.

எனவே, ஏப்ரல் தேர்வில் உங்கள் தனிப்பட்ட மதிப்பெண்ணை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், ​​மற்ற வேட்பாளர்களின் செயல்திறனை அடிப்படையாக வைத்து தான் இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஒருவர் எப்போதும் தங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

12ம் வகுப்பிற்குப் பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு – பட்டியல் இங்கே

மாநில அளவிலான தேர்வுகள்: WBJEE, AP EAMCET, UPSEE, OJEE போன்ற பல மாநில அடிப்படையிலான பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப செயல்முறைகள் இன்னும் நடைமுறையில்தான் உள்ளன. இது போன்ற நுழைவுத் தேர்வுகளில், போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகயிருப்பதால், நீங்கள் தரமான கல்லூரியில் இடம்  பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் மாநிலத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால், இனியாவது ஆராய்ச்சி செய்யத் தொடங்குங்கள்.

ஜேஇஇ மெயின்ஸ் தாண்டி மாணவர்கள் யோசிக்க வேண்டிய – 5 முக்கிய நுழைவுத் தேர்வுகள்

தனியார் கல்லூரிகள்: அரசு கல்லூரிகளைத் தவிர, வேலைவாய்ப்பில் உருவாக்குவதில் சிறந்து விளங்கும் பல தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு என்று தனியாக ஒற்றை நுழைவுத் தேர்வு இல்லையென்றாலும்:VITEEE, MET, SRMJEEE, BITS Pilani போன்ற நுழைவுத் தேர்வுகள் அந்தந்த உயர்க்கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றது.

பி.ஜி. நுழைவு: இளங்கலை மட்டத்தில் பி.எஸ்.சி அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான படிப்பைத் முடித்து விட்டு ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டத்தை தொடரலாம். ஐ.ஐ.டி உள்ளிட்ட அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் முதுகலை நுழைவுத் தேர்வுகள் மூலம் மாணவர்களைச் சேர்க்கின்றன.

வெளிநாட்டில் மேற்படிப்பு : நீங்கள் ஆப்டியுட்டில் கேள்விகளில் தெளிவாக இருந்தால்  இருந்தால், SAT என்ற தேர்வுக்கு விண்ணபிக்கலாம். இது பல வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாகும். இது ஒரு வருடத்தில் பல முறை நடத்தப்படுகிறது. வெளிநாட்டில் ஒரு பாடநெறியில் நுழைய பல உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தயார் செய்யுங்கள் : மேலே உள்ள விருப்பங்கள் எதுவும் ஈர்க்கவில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பினால், ஜேஇஇ மெயின் தேர்வு தான் உங்கள் வாழ்கை என்றால் ஒரு வருடம் இந்த தேர்வுக்காக நீங்கள் தயார் செய்யலாம். இருப்பினும், பிளான் பி ஒன்றையும்  மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, டிப்ளோமா படிப்பு அல்லது தொலைதூர திட்டத்தை பதிவு சய்து கொள்ளுங்கள்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Not make it through jee main hear are your alternatives viteee met srmjeee bits pilani

Next Story
நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்புNeet Coaching Classes will begin soon , education minister, government free neet coaching
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com