சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 96 அப்ரண்டிஸ் காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்பாக்கம் அணுமின் நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2023
இதையும் படியுங்கள்: TWAD Jobs 2023; தமிழக அரசு வேலைவாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
பயிற்சி இடங்களின் விவரம்
Carpenter – 2
Computer Operator and Programming Assistant - 6
Draughtsman (Civil) - 1
Draughtsman (Mechanical) - 2
Electrician - 14
Electronics Mechanic - 10
Fitter - 25
Instrument Mechanic – 10
Laboratory Assistant – Chemical plant - 6
Machinist – 4
Mason (Building Constructor) – 4
Plumber - 2
Turner - 4
Welder - 6
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 96
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 7,700 – 8,855
வயது தகுதி: 16 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் NPCIL நிறுவனத்தை தேடி விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Manager (HRM), HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam 603102, Chengalpattu.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.05.2022
மேலும் விவரங்களுக்கு https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_26042023_01.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil