Advertisment

TWAD Jobs 2023; தமிழக அரசு வேலைவாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேலைவாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்கு நிரப்பப்பட உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 11.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 61 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Technical Advisor

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும். மேலும் 30 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 1,25,000

Regional Co-Ordinator

காலியிடங்களின் எண்ணிக்கை – 4

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும். மேலும் 30 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 1,00,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் https://www.twadboard.tn.gov.in/sites/default/files/TA_Notice-merged_0.pdf  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Joint Chief Engineer (CoM), TWAD Board, Head Office, Chennai - 600005

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.twadboard.tn.gov.in/sites/default/files/TA_Notice-merged_0.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment