NTA NEET 2019 Result Date: நீட் தேர்வு எழுதிய மாணவர்களே உங்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்!

NTA NEET Result 2019 Expected to Release on June 5: அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

NTA NEET Result 2019 Expected to Release on June 5: அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NTA NEET 2019 Result Date

NTA NEET 2019 Result Date

NEET 2019 Result : நீட் தேர்வு எழுதிய மாணவர்களே இதோ உங்களுக்கான மிக முக்கியமான அறிவிப்பு.. இன்று 5.6.19 நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகிறது.

Advertisment

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதற்காக மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர்.

How to Check NTA NEET Result 2019 Online: நீட் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.மத்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நீட் தேர்வை (NEET - NATIONAL ELIGIBLITY CUM ENTRANCE TEST "2019") நடத்தி வருகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெறுகிறது.

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியீடு ; ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்

மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை நீட் தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இதற்கான இணைய தள முகவரி: https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx.

Exam Result Neet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: