TNDTE Diploma Result 2019 Released @tndte.gov.in: தமிழ்நாடு பாலிடெக்னிக் ஏப்ரல் மாதத்தில் நடந்த டிப்ளமோ தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வு முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் சார்பில் பாலிடெக்னிக்குகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2018-19 கல்வியாண்டு காலண்டரின்படி, ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது.
டிப்ளமோ படிப்புகளில், தியரி தேர்வுகள் மார்ச் 26ம் தேதியும் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதியும் துவங்கின. இதன்முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. டிப்ளமோ தேர்வுமுடிவுகள், tndte.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
TNDTE Diploma Result 2019 @tndte.gov.in
How to check diploma results in TNDTE website : தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வுமுடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி
tndte.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
அதில், results என்ற பகுதிக்குள் செல்லவும்.
தேவையான விபரங்களை நிரப்பி, தேர்வு முடிவுகளை அறியலாம்.
மேலும் படிக்க: TNDTE Results 2019: தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள்: ஆன் லைனில் பார்ப்பது எப்படி?
பாலிடெக்னிக் கல்லூரிகள், கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 17ம் தேதியும், முதலாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் பகுதிநேர வகுப்புகள், ஜூன் 24ம் தேதியும் துவங்க உள்ளன.
12.25 PM : தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் என மொத்தம் 459 பாலிடெக்னிக்குகள் செயல்பட்டு வருகின்றன.
12:00 PM : ஏப்ரல் மாதத்தில் நடந்த 2 , 4 மற்றும் 6ம் செமஸ்டருக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
11.50 AM : தேர்வு முடிவுகள் http://intradote.tn.nic.in/ என்ற இணையதளத்திலும் வெளியாகியுள்ளன. அதிகம் பேர் ஒரேநேரத்தில் பார்த்து வருவதால், இந்த இணையதளபக்கம் தற்போது முடங்கியுள்ளது
காலை 11.10 : தேர்வு முடிவுகள் tndte.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகம்பேர், இந்த பக்கத்தை பார்ப்பதன்விளைவாக, இணையதளம் முடங்கியுள்ளது. இதன்காரணமாக, இணையதளம் வேறுஒரு பக்கத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட முகவரி : http://112.133.214.75/result_Apr2019/