Tamil Nadu Polytechnic Diploma Results April 2019 at tndte.gov.in and intradote.tn.nic.in: தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை ஆன் லைனில் பார்ப்பது எப்படி? என்பது தொடர்பான தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. இது தொடர்பான அப்டேட்களை இங்கு அவ்வப்போது காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மாநில அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வு நடத்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் எந்த நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான tndte.gov.in, intradote.tn.nic.in ஆகியவற்றில் காணலாம். தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியானதும் உரிய தகவல் இங்கு தரப்படும்.

TN Polytechnic Diploma Results, How To Check: பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி?
தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகளை ஆன் லைனில் செக் செய்வது சுலபம். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான tndte.gov.in, intradote.tn.nic.in ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சென்று ‘ரிசல்ட்’ என குறிப்பிட்டிருக்கும் பகுதியை க்ளிக் செய்யவும். தொடர்ந்து உங்களது பதிவு எண்ணை சமர்ப்பித்தால், தேர்வு முடிவு கிடைக்கும். அதனை ஸ்க்ரீன் ஷாட் அல்லது டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
Read More: TNDTE Diploma Result 2019: பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஆன் லைனில் முயற்சி செய்வதால், மேற்படி இணையதளங்கள் திணறி வருகின்றன. இதனால் திடீரென அவை முடங்கியும் விடுகின்றன. மாணவர்கள் பொறுமையாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.