NTSE Tamil Nadu Result 2020 Out, Merit list: தமிழகத்தில் நடந்த NTSE தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. டி.டி.இ, டி.என் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்வின் முதல் கட்டத்திற்கான என்.டி.எஸ் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. என்.டி.எஸ், அதாவது தேசிய திறமை தேடல் தேர்வு 2020 தேர்வெழுதிய மாணவர்கள் dge.tn.gov.in -ல் உள்நுழைந்து தமிழக மாநிலத்திற்கான என்.டி.எஸ் முடிவை சரிபார்க்கலாம்.
Corona virus in India live : பிரதமர் மோடியின் புரூசல்ஸ் பயணம் ஒத்திவைப்பு
தேசிய திறனாய்வு தேர்வு கடந்த நவம்பர் 3, 2019-ல் நடந்தது. அதற்கான முடிவுகள் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள், 2020 மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆம் கட்டத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டின் முதல் கட்டத்திற்கான என்.டி.எஸ் முடிவு மெரிட் லிஸ்ட் வடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும். இது டி.ஜி.இ டி.என்-இன் அதிகாரப்பூர்வ தளமான dge.tn.gov.in. -ல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்
முடிவை எப்படி தெரிந்துக் கொள்வது?
DGE-ன் அதிகாரப்பூர்வ தளமான dge.tn.gov.in -ஐ விசிட் செய்யவும்.
ரிசல்ட் நோட்டிஃபிகேஷன் லிங்கை க்ளிக் செய்யவும்.
பிறந்த தேதி, பதிவெண் உள்ளிட்ட விபரங்களை பதிவிடவும்.
உங்களது என்.டி.எஸ்.இ தமிழ்நாடு முடிவு 2020 திரையில் தோன்றும்.
எதிர்கால தேவைகளுக்காக அதனை சேமித்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"