திறந்தநிலை Vs தொலைதூரக் கல்வி: வேலைவாய்ப்பில் எது சிறந்தது?

திறந்தநிலை கல்விமுறை மற்றும் தொலைதூரக் கல்விமுறை இடையில் அதிக ஒற்றுமை இருந்தாலும், இவற்றிற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடும் உள்ளது.

By: March 16, 2020, 6:00:15 PM

திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்விமுறை இடையில் அதிக ஒற்றுமை இருந்தாலும், இவற்றிற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடும் உள்ளது.

திறந்தநிலை கல்விமுறையில், எந்த வயது வரம்புமின்றி  படிப்புகளில், சேர்க்கை பெற மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தொலைதூரக் கல்வி என்பது திறந்தநிலை கல்விமுறையின் ஒரு வடிவமாகும். இதன் மூலம் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் தாங்கள் விரும்பிய படிப்பைத் தொடரலாம்.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுடன்  பேசிய ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் சாண்ட்வான் சட்டோபாத்யாய், பிரதான கல்வியில் இருந்து வெளிவந்த மாணவர்களுக்கு, திறந்தநிலை கல்விமுறை ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார்.

“திறந்தநிலை கல்வி நிருவனங்களில் சேருவதற்கு வயது தொடர்பான தகுதிகள் எதுவும் தேவையில்லை என்பதால், படிப்பை நிறுத்திய மாணவர்கள், எப்போது வேண்டுமானாலும்  தங்கள் படிப்பைத் தொடரலாம்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில், சிவசுப்பிரமணியன் தனது 93 ஆவது வயதில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இது திறந்தநிலை கல்வி முறையில் மட்டுமே சாத்தியமாகும். நீண்ட இடைவெளி இருந்தபோதிலும், வேட்பாளர்களுக்கு இரண்டாவது வாய்ப்புகிடைக்கும் . அதே வேளையில், தொலைதூரக் கல்விமுறை பட்டப்படிப்பின் மதிப்பு,  பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

கட்டாயம் படிக்க: 93 வயதில் முதுகலைப் பட்டம்: நம்மால் ஏன் முடியாமல் போனது?

ஏன் இந்த வித்தியாசம்?

குரு ஜம்பேஸ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக, துணைவேந்தர் வி-சி டங்கேஷ்வர் குமார் கூறுகையில்,“திறந்தநிலை மற்றும் தொலைத் தூரக்கல்வி மிகவும் ஒத்திருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

திறந்த கல்வியில், மாணவர்கள் ஆய்வக வசதிகளைப் பெறுகிறார்கள். எனவே, அவர்கள் தொழில்முறை துறையில் தங்கள் வேலைவாய்ப்பினை எளிதாக்குகின்றனர்   .

தொலைதூர பயன்முறையில், மாணவர்கள் ஆய்வக வசதிகள் பெறுவதில்லை, இதனால், ஒப்பீட்டளவில் வேலைகளில் முன்னுரிமையும் அவர்களுக்கு  கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொழில்நுட்பக் படிப்பை, தொலைதூர பயன்முறையிலோ அல்லது திறந்த பயன்முறையிலோ தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் 2017 ல் தீர்ப்பளித்தது. தொலைதூரக் கல்விமுறை மூலமாக  2001 முதல் 2005 வரையில் பெறப்பட்ட அனைத்து பொறியியல் பட்டங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது .

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) தொலைதூர பயன்முறையில் வழங்கப்படும் அனைத்து பொறியியல் பட்டங்களையும் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

ஆங்கிலத்தில் படிக்க : Open vs Distance: Which one has more value for a job?

பொறியியல், மருத்துவம் , நர்சிங், கட்டிடக்கலை, பிசியோதெரபி, வேளாண்மை ஆகிய பட்டப்படிப்புகள்  தொலைதூர முறைக் கல்வியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ​​இந்தியாவில் 14 அரசு திறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ),

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்த பல்கலைக்கழகம் ஹைதராபாத்,

வர்த்மான் மகாவீர் திறந்த பல்கலைக்கழகம், கோட்டா,

நாலந்தா திறந்த பல்கலைக்கழகம், பாட்னா,

யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்த பல்கலைக்கழகம், நாசிக்,

மத்தியப் பிரதேச போஜ் திறந்த பல்கலைக்கழகம், போபால்,

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்த பல்கலைக்கழகம், அகமதாபாத்,

கர்நாடகா மாநில திறந்த பல்கலைக்கழகம், மைசூர்

நேதாஜி சுபாஸ் திறந்த பல்கலைக்கழகம், கொல்கத்தா,

உ.பி. ராஜர்ஷி டாண்டன் திறந்த பல்கலைக்கழகம், அலகாபாத்,

தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் (டி.என்.யூ), சென்னை,

சுந்தர்லால் சர்மா திறந்த பல்கலைக்கழகம் (பி.எஸ்.எஸ்.ஓ), பிலாஸ்பூர்,

உத்தராகண்ட் திறந்த பல்கலைக்கழகம், ஹல்த்வானி,

கிருஷ்ணா காந்தா ஹேண்டிக் மாநில திறந்த பல்கலைக்கழகம், குவாஹாட்டி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Open vs distance education similarities and differences education news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X