பொதுத்துறை வங்கிகள் (PSBs) அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 4,61,017 மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்க கல்விக் கடன் பெற்றுள்ளனர் என்று நிதி அமைச்சகம் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இவர்களில் 42,364 மாணவர்கள் மருத்துவம் படிக்க கல்விக் கடன் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் கல்விக் கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் நிலையான உயர்வு காணப்படுகிறது. 2012-13 ஆம் ஆண்டில், மொத்தம் 22,200 மாணவர்கள் கல்விக் கடன் பெற்றனர் மற்றும் 2020 வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இதையும் படியுங்கள்: 695 பல்கலைக்கழகங்கள், 34,734 கல்லூரிகள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை; மத்திய அரசு
தொற்றுநோய் ஆண்டில், 56,930 மாணவர்கள் கல்விக் கடனைப் பெற்றுள்ளனர், இது 2019 ஆம் ஆண்டில் 69,183 மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்விக் கடனைப் பெற்றிருந்ததை விட மிகக் குறைவாக இருந்தது. அடுத்த ஆண்டில் (2021) 69,898 மாணவர்கள் கல்விக் கடனைப் பெற்றதன் மூலம் பாதிப்பு படிப்படியாக மீண்டு வந்தது.
கோவிட் -19 தொடங்கிய போதிலும், மருத்துவ மாணவர்கள் மீது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் தாக்கம் இருந்தபோதிலும், வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்காக வழங்கப்படும் கடன்கள் சீராக உயர்ந்துள்ளன.
வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெறுவதற்காக வழங்கப்பட்ட கடன்கள்
2018-19 - 237.13 கோடி
2019-20 - 298.97 கோடி
2020-21 - 243.64 கோடி
2021-22 - 289.82 கோடி
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.39,268.82 கோடி மதிப்பிலான மாணவர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்காக ரூ.1,790.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil