Periyar University Results 2018: கடந்த நவம்பர் மாதம் UG, PG தேர்வுகளை எழுதிய பெரியார் பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வு முடிகள் ஜனவரி முதல் வாரம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் எளிமையாக பார்க்கலாம்.
Read More: periyaruniversity.ac.in இணையதளம் திணறியது: தேர்வு முடிவுகள் அறிவிப்பு
சேலம் மாவட்டத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைப்பெற்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Periyar University November UG and PG Exams Result Date: ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?
பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். பிஜி மற்றும் யுஜி வகுப்புகளுக்கான தேர்வு கடந்த 2018 நவம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் 2019 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Periyar University Results 2018
1.periyaruniversity.ac.in அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நுழையவும்.
2.முகப்பு பக்கத்தில், ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும்.
3. புதிய பக்கம் வெளிப்படும்.
4.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.
5. ‘summit’ பகுதியில் ‘க்ளிக்’ செய்யவும்.
6. ரிசல்ட் தெரிய வரும்.
7.ரிசல்டை பார்ப்பதுடன், ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
பெரியார் பல்கலைக்கழக வழக்கமான நடைமுறைப்படி மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு 10 நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
வங்கி எழுத்தர் தேர்வு முடிவுகள் இன்று ரிலீஸ்... எப்படி பார்ப்பது?