Periyar University Results 2019 Date And Time: தமிழ்நாட்டின் மிக முக்கிய உயர்க்கல்வி நிருவனங்களில் ஒன்றாக கருதப்படும் பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை மாணவர் சமுதாயம் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடும் பெரியார் பல்கலைக்கழகம், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய செமஸ்டர் தேர்வு முடிவுகளை இன்று ( ஜனவரி 6) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளிமாநில மாணவர்களும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1, 3, 5 என ஒற்றைப் படை எண் செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர்/நவம்பரில் நடைபெறுவது வழக்கம். இரட்டைப் படை எண் செமஸ்டர் (2, 4, 6) தேர்வுகள் மார்ச்/ஏப்ரலில் நடைபெறும்.
Salem periyar university UG PG november results 2019: பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
அந்த வகையில் 2019 அக்டோபர்/ நவம்பரில் நடைபெற்ற ஒற்றைப்படை எண் வரிசை செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளையே மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டான periyaruniversity.ac.in-ல் அறிவிப்பு எதுவும் இல்லை.
எனினும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது பெரியார் பல்கலைக்கழகம். கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டும் அதையொட்டி தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்தியில் தேர்வு முடிவுகளை நகம் கடித்தபடி மாணவர்கள் எதிர் நோக்கியிருக்கிறார்கள். பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ வெப்சைட்டான periyaruniversity.ac.in-ல் தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் பார்க்கலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழும் இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வெளியிட இருக்கிறது.
பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள தெரிந்து கொள்ள, இந்த இணைப்பை - கிளிக் செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.