தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு எப்படி தயாராவது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB எனப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை அடுத்த ஆண்டு நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு 2000க்கும் அதிகமான காலியிடங்களுக்கு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் காலாண்டு விடுமுறை எப்போது? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, இதில் 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இரண்டாம் தாள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு, உளவியல் மற்றும் பொது அறிவு பகுதியிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
தமிழ் மொழித் தகுதித் தேர்வை பொறுத்தவரை, 6- 10 வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும். முந்தைய ஆண்டு வினாக்கள் அல்லது இதுவரை அரசுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடிப்படையில் தயாராகிக் கொள்ளுங்கள்.
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் நீங்கள் ஏற்கனவே திறமையானவராக இருந்தாலும், போட்டித் தேர்வு கண்ணோட்டத்தில் நன்றாக படித்துக் கொள்வது அவசியம். பாடங்களை குறைந்தப்பட்சம் 3 முறையாவது நன்றாக படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினசரி நேர அட்டவணையை வகுத்து அதற்கேற்றாற்போல், தயாராகுங்கள். படிப்பதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை சேகரித்து, வைத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அலசி ஆராய்ந்து, அதற்கு ஏற்றாற்போல் தயாராகுங்கள். ஒவ்வொரு பாடத்திலும், ஒரு பகுதியினை படித்த பிறகு, அது தொடர்பான குறுகிய தேர்வை எழுதிப் பாருங்கள்.
உளவியல் மற்றும் பொது அறிவு பிரிவுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் தவிர தேவையான புத்தகங்களை தேடி படியுங்கள். படிக்கும்போது நன்றாக புரிந்து படித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil