புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டல், பேப்பர் நகல் பெறுவதற்கு வருகின்ற 11-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு மேல்நிலை கல்வி துணை இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
இதையும் படியுங்கள்: பொறியியல், அறிவியல் மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி; எல்&டி உடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்
மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தங்கள் தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாக தேர்வெழுதியேர் விடைத்தாள் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்யக் கோரியோ விண்ணப்பிக்க விரும்பினால் 09.05.2023 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணி முதல் 13.05.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil