புதுச்சேரி பாரதியார் பல்கலைகூடத்தில் உள்ள இசை, நடனம், விஷுவல் ஆர்ட்ஸ் பாட பிரிவுகள் BPA and BVA க்கு நாளை முதல் இணையதளம் (www.centacpuducherry.in) வழியாக விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி சென்டாக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, புதுச்சேரி பாரதியார் பல்கலை கூடம் கல்லூரியில் (இசை / நடனம் / விஷுவல் ஆர்ட்ஸ்) படிப்பிற்கான இந்த ஆண்டு 2023-24 கல்வியாண்டிற்கான புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களின் U.T. விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: புதுவை அரசு பணியிடங்களை நிரப்ப துணை பணியாளர் தேர்வு வாரியம்; பூர்வாங்க பணிகள் தொடக்கம்
மேலும் பாரதியார் கல்லூரியில் யு.ஜி ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் (இசை / நடனம் / விஷுவல் ஆர்ட்ஸ்) படிப்புகளில் சேர்க்கை 2023-24 கல்வியாண்டுக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
மேலும் www.centacpuducherry.in மூலம் 24.05.2023 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 10.06.2023, 06.00.p.m. CENTAC தகவல் சிற்றேட்டில் விரிவான தகவல்கள் உள்ளன. இளநிலை பட்டதாரி கலை & அறிவியல் படிப்புகளுக்கான தகவல் சிற்றேடு & ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் படிப்புகள் ஆன்லைன் விண்ணப்ப சமர்ப்பிப்பு திறக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.05.2023 (வியாழன்) : 10.06.2023 (சனிக்கிழமை). இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil