புதுச்சேரியில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 324 பணியிடங்களுக்கு துறை சார்ந்த பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இளநிலை எழுத்தா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேரடித் தோ்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உதவியாளா் பணியிடங்கள் பதவி உயா்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என அரசுத் துறை அனைத்து அலுவலா்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையும் படியுங்கள்: தமிழக மீன்வளத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்த நிலையில், கடந்த 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலும் ஒவ்வோர் ஆண்டிலும் காலியான பணியிட எண்ணிக்கை விவரங்களை அரசுப் பணியாளா் மற்றும் நிர்வாகத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அரசுத் துறை காலிப்பணியிடங்களுக்கு தோ்வு நடத்தி, அதிலும் இட ஒதுக்கீடு விவரங்கள் பின்பற்றப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பணியில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு வருகிற மார்ச் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil