கியூஎஸ் தரவரிசை: 'டாப் 100'-ல் சென்னை ஐஐடியின் 3 துறைகள்

முதல் 100 இடங்களில் தனது செயல்திறனை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், உலகின் சிறந்த 50 துறைகளின் பட்டியல்களிலும் இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் முன்னேறியுள்ளன.

உலகளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிடும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்-QS ) என்ற தனியார் நிறுவனம் (QS) தற்போது  கல்லூரி நிறுவனங்களில் செயல்படும் துறை வாரியான (QS World University Rankings by Subject 2020) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் 100 இடங்களில், இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படும் 26 துறைகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை வெறும் 21 ஆக இருந்தது.

ஐ.ஐ.டி-டெல்லி செயல்படும் ஐந்து துறைகள் (Departments), ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் போன்ற நிறுவனங்களில் செயல்படும் தலா மூன்று துறைகள் முதல் நூறு இடங்களுக்குள் வந்துள்ளன. ஐ.ஐ.எம் அகமதாபாத், ஐ.ஐ.எம் பெங்களூர் ஆகியவற்றில் இயங்கும் வணிக/மேலாண்மை ஆய்வுகள் துறை 51-100 என்ற தரவரிசையில் வந்துள்ளது.

நூறு இடங்களுக்குள் வந்த அனைத்து 26 துறைகளும் மத்திய அரசு நடத்தும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதரணமாக, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி, டெல்லி பல்கலைக்கழகம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

முதல் 100 இடங்களில் தனது செயல்திறனை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், உலகின் சிறந்த 50 துறைகளின் பட்டியல்களிலும் இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் முன்னேறியுள்ளன ( Top 50’s Club).

ஐ.ஐ.டி டெல்லியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை, ஐ.ஐ.டி பம்பாயின் வேதியியல் பொறியியல் மற்றும் கனிமம் மற்றும் சுரங்க பொறியியல் துறை; டெல்லி பல்கலைக்கழகத்தில் வளர்ச்சி ஆய்வுகள் துறை (development Studies) ஐ.ஐ.டி கரக்பூரில் செயல்படும் கனிம மற்றும் சுரங்க பொறியியல் துறை  ஆகியவை அந்தந்த துறைகளில் உலகின் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன.

கடந்த ஆண்டு, ஐ.ஐ.டி-பம்பாய், ஐ.ஐ.டி-கரக்பூரில் செயல்படும் கனிம மற்றும் சுரங்க பொறியியல் துறை, டெல்லி பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வுகள் துறை மட்டுமே இந்த 50 கிளப்பில் இருந்தன.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) உலகின் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனமாக உள்ளது. அதில் செயல்படும் 12 துறைகள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் 11 துறைகள் முதலிடத்தில் உள்ளன, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் எட்டு துறைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

மேலும், விவரங்களுக்கு – Explained : புதிய ஆசிய உயர்க்கல்வி தரவரிசை பட்டியல், இந்திய கல்வி நிறுவனங்களின் நிலை என்ன ?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close