Railway Recruitment 2018 : ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளனர். 798 இடங்களுக்கான தேர்வினை நடத்த, ஜனவரி 1ம் தேதியில் இருந்து விண்ணப்பங்களை தேர்வு எழுத விரும்புகின்றவர்கள் பூர்த்தி செய்யலாம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகுதிகள் கொண்ட இரு பாலினத்தவரும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யலாம்.
Railway Recruitment 2018 : ஆர்.பி.எஃப். தேர்வுகள் எப்போது ?
அடிப்படை கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18-25 வயதுடையவராக இருத்தல் அவசியம். ஏற்கனவே ரயில்வேயில் ஏதேனும் ஒரு தேர்வினை எழுதி, அதற்கான முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் இந்த தேர்வினை எழுத இயலாது.
ரயில்வே சிறப்பு பாதுகாப்புப்படை காவல் பணியிடங்களில் 10% இடம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கணினி மூலம் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் என ஒவ்வொரு படி நிலையாக இந்த தேர்வுகள் நடத்தப்படும். கணினி தேர்வானது 15 இந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளதால், தேர்வர்கள் தைரியமாக தேர்வுக்கு தயாராகலாம். கணினி தேர்வு பிப்ரவரி / மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும்.
மேலும் படிக்க : ஆர்.ஆர்.பி. ஏ.எல்.பி தேர்வு முடிவுகள் அறிப்பு