10ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள் ? ரயில்வேயில் வேலை பார்க்க சிறந்த வாய்ப்பு...

Railway Released Jobs Notification :  கடந்த வருடம் கிட்டத்தட்ட 1 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது இந்திய ரயில்வேயின் க்ரூப் சி, மற்றும்...

Railway Recruitment 2019 : கடந்த வருடம் கிட்டத்தட்ட 1 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது இந்திய ரயில்வேயின் க்ரூப் சி, மற்றும் டி தேர்வுகள். இந்த வருடமும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் பட்டதாரிகளிடம் இருந்து வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

அப்பேரண்டிஸ் வேலை முதற்கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ரயில்வே காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கடந்த வருடம் நடத்தப்பட்ட க்ரூப் சி மற்றும் க்ரூப் டியின் தேர்வு முடிவுகள் இந்த வருடம் அறிவிக்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படும்.

Railway Recruitment 2019 – இந்த வருடத்திற்கான பணியிடங்கள்

தென்னக ரயில்வே

தென்னக ரயில்வேயில் அப்பரெண்டிஸ் வேலைக்காக 963 பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வர்கள் வருகின்ற 16ம் தேதிக்குள் விண்ணப்படிவங்களை swr.indianrailways.gov.in. இந்த இணையத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கு ரயில்வே

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 3553 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேற்கு ரயில்வேயின் அறிவிப்பின் படி இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்படிவங்கள் wr.indianrailways.gov.in. இந்த இணைய தளத்தில் கிடைக்கின்றது.

10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான பள்ளிப்படிப்பினை முடித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

கிழக்கு மற்றும் மத்திய ரயில்வேயில் வேலை

கிழக்கு மத்திய ரயில்வேயில் 2,234 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்படிவங்களை வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

பாட்னா, ஸமாஸ்திபூர், தான்பாத், ஹர்நாத், தானாபூர் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பினை படித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க : சென்னை ஈ.எஸ்.ஐ.சி.யில் செவிலியராக பணியாற்ற விருப்பமா ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close