Advertisment

RBI Grade B Jobs: ரிசர்வ் வங்கியில் 291 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு; 291 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rbi

ரிசர்வ் வங்கி (கோப்பு படம்)

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கிரேடு ‘பி’ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 291 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிங்க!

காலியிடங்களின் விவரம்

Officers in Grade ‘B’(DR)- General – 222

Officers in Grade ‘B’(DR)- DEPR – 38

Officers in Grade ‘B’(DR)- DSIM - 31

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.05.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

DEPR மற்றும் DSIM பிரிவுகளுக்கு கணிதம், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தோராயமாக ரூ. 1,16,914

தேர்வு செய்யப்படும் முறை:

இதில் இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்கட்டத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability), பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

இரண்டாம் கட்டத் தேர்வு:

இரண்டாம் கட்டத் தேர்வு, கொள்குறி வகை மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வாக நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் நேர்முகத் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.rbi.org.in அல்லது https://ibpsonline.ibps.in/rbioapr23/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2023

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100 ஆகவும் உள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DADVTGRB09052023FA65E4FB1C2CF473396B4FD7E5F69CDDE.PDF என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment