சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் RRB குரூப் டி தேர்வு முடிவை டிசம்பர் 24 அல்லது அதற்கு முன் அறிவிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசல்ட் வெளியிடப்பட்டதும், சென்னை RRB இன் அதிகாரப்பூர்வ இணையதள https://www.rrbchennai.gov.in/ ல் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு, RRB சென்னையின் குரூப் D தேர்வு ஆகஸ்ட் 17 முதல் அக்டோபர் 11 வரை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) வடிவத்தில் பல கட்டங்களாக நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, தேர்வு முடிவுகள் டிசம்பர் 24 அல்லது அதற்கு முன் வெளியிடப்படும். “உடல் திறன் தேர்வுக்கான (PET) தேர்வர்களுக்கான CBTயின் முடிவுகள் தற்போது செயலாக்கத்தில் உள்ளன, மேலும் தேர்வு முடிவுகள் 24.12.2022 அன்று அல்லது அதற்கு முன் RRB-களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன,” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல் திறன் தேர்வுக்குத் தயாராகும் படி ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. “CBTயில் தகுதிபெறுவோம் என எதிர்பார்க்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மண்டல ரயில்வேயின் அந்தந்த ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவுகளால் (RRC) தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக நடத்தப்படும் உடல் திறன் தேர்வுக்கு (PET) தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், இந்த உடல் திறன் தேர்வுகள் ஜனவரி 2023 முதல் நடத்த தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. " என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து RRCகளும் அதற்கான தனித்தனியான அறிவிப்புகளை அந்தந்த இணையதளங்களில் வெளியிடும், மேலும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களை தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil