RRB RPF SI exam postponed : இந்திய ரயில்வேயின் ஆர்.பி.எஃப் (ரயில்வே ப்ரோடெக்சன் ஃபோர்ஸ்) உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 9ம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது இந்திய ரயில்வே.
ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான உதவி ஆய்வாளர் க்ரூப் சி மற்றும் க்ரூப் டி தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகள் நேற்று வரவேண்டிய நிலையில், இந்திய ரயில்வே தேர்வுகளுக்கான அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
RRB RPF SI exam postponed
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்களை மிக விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். தேர்வுகளுக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டவுடன், தேதிகள் இணைய தளம் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக அறிவிக்கப்படும்.
9ம் தேதி (இன்று) நடைபெற இருக்கும் தேர்வு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஏனைய தேர்வுகள் எப்போதும் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
அட்மிட் கார்டுகளை si.rpfonlinereg.org என்ற இணைய தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுகளுக்கு 10 நாட்கள் முன்பிருந்தே அட்மிட் கார்ட்கள் இணையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1120 சப் இன்ஸ்பெக்டர் காலி இடங்களுக்காக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. காலி பணியிடங்களில் 819 பணியிடங்கள் ஆண்களுக்காகவும், 301 பணியிடங்கள் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 10ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள் ? ரயில்வேயில் வேலை பார்க்க சிறந்த வாய்ப்பு…