SSB Recruitment: மத்திய காவல்துறையில் 399 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Central Govt Constable Posts: Recruitment Notification for Constable Posts in Border Armed Forces Sashastra Seema Bal, Salary up to Rs.69,100 per month | மத்திய அரசு கான்ஸ்டபிள் பணியிடங்கள்: எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு சஷாஸ்த்ரா சீமா பால், மாதம் ரூ.69,100 வரை சம்பளம்

SSB Recruitment: மத்திய காவல்துறையில் 399 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் சஷாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal) காவல் படையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காக்கிச்சட்டை போட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மொத்தம் 399 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விளையாட்டில் சிறந்த விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.10.2022க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் 146 பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

Constable (General Duty)

காலியிடங்களின் எண்ணிக்கை : 399

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 21,700- 69,100

வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.ssbrectt.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19114_3_2223b.pdf  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Sashastra seema bal recruitment 2022 for 399 constable posts apply online

Exit mobile version