தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டங்களுக்கு வழிவகுக்கும் கூட்டுப் பட்டப்படிப்புகளைத் தவிர, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கும் வகையில், நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் மாநில பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: வெளிநாட்டு மருத்துவ படிப்பு; கோவை வழிகாட்டி முகாமில் மாணவர்கள் திரளாக பங்கேற்பு
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, பயோமெடிக்கல் டிவைசஸ் & டிஜிட்டல் டெக்னாலஜிஸ் ஆகியவை இந்தியாவின் செமிகண்டக்டர் மற்றும் பிற மிஷன் மோட் திட்டங்களுடன் ஒத்திசைக்கப்பட வேண்டும் என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோடிட்டுக் காட்டினார். புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 20, 2023 அன்று கையெழுத்தானது, இது 2023-24 கல்வியாண்டு முதல் செயல்படும்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அறிவியல், பொறியியல், மருத்துவம், கல்வி, கலை, சட்டம் மற்றும் மேலாண்மை போன்ற பல்வேறு பிரிவுகளில் பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட திட்டங்களை வழங்குகிறது. மேலும், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil