Advertisment

ஆண்டுக்கு ரூ. 15,000 உதவித்தொகை; எஸ்.பி.ஐ ஆஷா திட்டம் பற்றிய முழுத் தகவல்கள் இதோ...

ஆண்டுக்கு ரூ.15000 வழங்கும் எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022; தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆண்டுக்கு ரூ. 15,000 உதவித்தொகை; எஸ்.பி.ஐ ஆஷா திட்டம் பற்றிய முழுத் தகவல்கள் இதோ...

எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 என்பது எஸ்.பி.ஐ அறக்கட்டளையின் கல்வி சார்ந்த ஒருங்கிணைந்த கற்றல் இயக்கத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அவர்களின் கல்வியின் தொடர்ச்சியை உறுதிசெய்ய நிதி உதவி வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.

Advertisment

எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஓராண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை பெறும் வாய்ப்பைப் பெறலாம். Buddy4Study இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை செயல்படுத்தும் பங்குதாரராக உள்ளார்.

இதையும் படியுங்கள்: TNEA Counselling 2022: பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் 1 Choice Filling; பெஸ்ட் கல்லூரிகளை தேர்வு பண்ணுங்க!

SBI ஆஷா உதவித்தொகைக்கான தகுதிகள்:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

SBI ஆஷா உதவித்தொகையின் நன்மைகள்:

ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000 உதவித் தொகை கிடைக்கும்.

SBI ஆஷா உதவித்தொகைக்கு தேவையான ஆவணங்கள்:

முந்தைய கல்வியாண்டின் மதிப்பெண் பட்டியல்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று (ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்/பான் அட்டை)

நடப்பு ஆண்டு சேர்க்கை சான்று (கட்டண ரசீது / சேர்க்கை கடிதம் / நிறுவன அடையாள அட்டை / நம்பகத்தன்மை சான்றிதழ்)

விண்ணப்பதாரரின் (அல்லது பெற்றோர்) வங்கி கணக்கு விவரங்கள்

வருமானச் சான்று (படிவம் 16A/அரசு அதிகாரத்தின் வருமானச் சான்றிதழ்/சம்பளச் சீட்டுகள் போன்றவை)

விண்ணப்பதாரரின் புகைப்படம்

SBI ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program?ref=HomePageBanner இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

ஏற்கனவே பதிவு செய்தவர் என்றால், உங்கள் பதிவு செய்யப்பட்ட ஐடியுடன் Buddy4Study இல் உள்நுழைந்து, 'விண்ணப்பப் படிவம் பக்கத்தில்' இறங்கவும்.

ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால் - Buddy4Study இல் உங்கள் மின்னஞ்சல்/மொபைல்/ஜிமெயில் கணக்குடன் பதிவு செய்துக் கொள்ளவும்.

நீங்கள் இப்போது ‘SBI ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022’ விண்ணப்பப் படிவப் பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள்.

விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க, ‘விண்ணப்பத்தைத் தொடங்கு’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.

தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்றவும்.

‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ ஏற்று, ‘ப்ரிவியூ’ என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த அனைத்து விவரங்களும் முன்னோட்டத் திரையில் சரியாகக் காட்டப்பட்டால், விண்ணப்ப செயல்முறையை முடிக்க ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.

எஸ்.பி.ஐ ஆஷா உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி: அக்டோபர் 15, 2022

தகுதியுள்ளவர்கள் எஸ்.பி.ஐ ஆஷா உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து, ஆண்டுக்கு ரூ. 15,000 நிதியுதவி பெற்று, உங்கள் கல்வி தடையின்றி தொடர்வதை உறுதி செய்யுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment