SBI Junior Associate Eligibility, Syllabus: இந்தியாவில் பிரபலமான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) சில நாட்களுக்கு முன்பு 8,000 ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கான அறிவிபை வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால் (ஜனவரி 26ம் தேதி), ஆர்வமிருந்தும் விண்ணப்பிக்காத தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் - sbi.co.in.
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
விண்ணப்பித்த தேர்வரக்ள, முதல்நிலை தேர்வுக்கு தயாராக வேண்டும்.
பிப்ரவரி இறுதியில் (அ) மார்ச் தொடக்கத்தில் முதல்நிலை தேர்வு நடத்தப்படும் என்று எஸ்பிஐ தனது அறிவிப்பில் அறிவித்துள்ளது. இருப்பினும், தேர்வுக்கான சரியான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த,தேர்வு வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு முறை :
முதல்நிலை தேர்வு:
ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது. 100 அப்ஜெக்டிவ் கேள்விகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு (1/4 விகுதியில்). தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்
முதன்மை தேர்வு:
190 அப்ஜெக்டிவ் கேள்விகள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கேற்ப நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு (1/4 விகுதியில்).
பொது ஆங்கிலத்தை தவிர, அனைத்து கேள்விகளும் இந்தி, ஆங்கிலம் என இரட்டை மொழியில் கேட்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
தேர்வுகான சிறப்பு பயிற்சி மையம்:
எஸ்சி/எஸ்டி/மத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தேர்வர்களுக்காக சிறப்பு பயுற்சி மையங்களை ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.