School education Minister will release public exam schedule for class 10,11,12: தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை (மார்ச் 2) வெளியாக உள்ளது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் தங்களின் அடுத்தக் கட்ட படிப்பை தொடர முடியும்.
இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் முழுமையாக செயல்படாததாலும், தேர்வுகள் நடத்த முடியாததாலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமான பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4: 5000 காலிப் பணியிடங்கள்; புது சிலபஸ்; டி.என்.பி.எஸ்.சி தலைவர் முக்கிய அறிவிப்பு
இந்தநிலையில், கொரோனா தாக்கம் குறைந்து, பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து, இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் நாளை காலை (02.03.2022) 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil