அரசின் நிதி நிலை அறிக்கை குறித்தும் துறை ரீதியாக இந்த ஆண்டு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்தடுத்து மாணவிகளிடம் கேள்விகளை கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசின் திட்டங்களை மாணவிகள் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் பாராட்டு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்: பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு நெட், ஸ்லெட் தேவை இல்லை; அண்ணா பல்கலை. தளர்வு
அமைச்சர் செந்தில் பாலாஜி மேடை பேச்சு: புதுமை பெண் திட்டத்திற்கு பாராட்டு விழா

மாணவிகள் ரொம்ப இறுக்கமாக உள்ளனர், இது நல்ல நாள் சந்தோஷமாக இருங்கள் என்று மாணவிகளை பார்த்து அமைச்சர் கூறினார்.
அவினாசி லிங்கம் பல்கலைகழகத்தில் 452 மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் நிதி நிலை ரொம்ப மோசமாக இருந்தது, அப்பொழுதும் தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் நினைத்தார். கல்வியிலும் சரி பொது வாழ்விலும் சரி வாழ்ந்து காட்டியவர் அவினாசி லிங்கம். 8500 பேர் ஒரு கல்வி நிறுவனத்தில் பயில்கின்றார். சிறப்பாக கல்வியினை அளித்து வருகின்றனர். கல்வி நிறுவனம் அமைந்துள்ள சாலையில் ஐயாவின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பின்னர், இந்த ஆண்டு பள்ளி கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்று மாணவிகளை பார்த்து அமைச்சர் கேள்வி எழுப்பினார். மாணவிகள் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
பள்ளி கல்வித்துறை வரலாற்றில் அதிகபட்சம் இந்த ஆண்டு தான் கல்விக்கு அதிக தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டில் எவ்வளவு அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது, கேட்ட அமைச்சர், 39 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
உயர்கல்வி, பள்ளி கல்வித்துறை, என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. மகளிர் உரிமை தொகைக்கு இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? என்று கேட்ட அமைச்சர், அரசின் திட்டங்கள் எந்த அளவு உள்ளது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் தொடர்ந்து உங்களிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றேன். 7 ஆயிரம் கோடி மகளிர் உரிமை தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி, வேளாண்மை போன்றவற்றிற்கும் இந்த முறை நிதி நிலை அறிக்கையில் அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் அவர்கள் பிறந்தநாள் போது துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்டங்கள் என்ன? மெட்ரோ ரயில் திட்டதிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, ஐ.டி பார்க் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். வேலை வாய்ப்பை சொந்த மாநிலத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஐ.டி பார்க் அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். எழில் மிகு கோவை என்ற சிறப்பான திட்டம் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசின் நிதி நிலை அறிக்கை பற்றி மாணவிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி மேடையில் பேசினார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil