Sivaganga District recruitment 2022 computer operator jobs apply online, தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க! | Indian Express Tamil

தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

சிவகங்கை மாவட்ட சத்துணவு பிரிவு வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

சிவகங்கை மாவட்ட சத்துணவு பிரிவில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் அக்னிபாத் ஆள்சேர்ப்பு முகாம் : இந்திய ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு

கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.10.2022 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=43-172 என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  15.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/11/2022110136.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Sivaganga district recruitment 2022 computer operator jobs apply online