மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!
நிரப்பப்படும் பதவிகளின் விவரம்
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)
Data Entry Operator (DEO)
Data Entry Operator, Grade ‘A’
காலியிடங்களின் எண்ணிக்கை : 4,500
கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு பன்னிரெண்டாம் (12) வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் சில பதவிகளுக்கு சில கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.
வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பள விவரம்
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200)
Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4 (Rs. 25,500-81,100)
Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)
Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4 (Rs. 25,500-81,100)
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழியில் (Computer Based Examination) முதல்நிலை தேர்வு (Tier-I), முதன்மைத் தேர்வு (Tier-II) மற்றும் திறனறி தேர்வு (Skill Test/ Typing Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
கணினி வழி முதன்மைத் தேர்வு 405 மதிப்பெண்களுக்கு 2 மணிநேரம் 15 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலத்தில் 40 கேள்விகள், பொது அறிவு பகுதியிலிருந்து 20 கேள்விகள், திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள், கணினி பகுதியிலிருந்து 15 கேள்விகள் என மொத்தம் 135 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
திறனறி தேர்வானது தகுதித் தேர்வாகும். இதில் தட்டச்சு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06122022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.