SSC MTS recruitment 2022 apply soon: மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நிரப்பப்படும் பதவிகளின் விவரம்
பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff)
ஹவால்தார் (Havaldar in CBIC and CBN)
காலியிடங்களின் விவரம்
பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff) – தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.
ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) - 3603
கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு பத்தாம் (10) வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), எழுத்து தேர்வு (Descriptive Paper) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 1 மணி 30 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
எழுத்துத்தேர்வானது, 50 மதிப்பெண்களுக்கு 45 நிமிட கால அளவில் நடைபெறும். இந்த தேர்வு கட்டுரை எழுதுதல் (Essay), கடிதம் எழுதுதல், விரிவான விடையளித்தல் போன்ற வகைகளில் அமையும். இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்.
இதையும் படியுங்கள்: இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!
ஹவால்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22032022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.