scorecardresearch

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் இணை ஆணையர் அலுவலகங்களில் 6 காலியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Tamilnadu HRCE JC office recruitment 2022 apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் இணை ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

பணியிடம்: காஞ்சிபுரம்

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

ஓட்டுநர் (Staff Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 (காஞ்சிபுரம் – 1, திண்டுக்கல் – 1)

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

இரவுக் காவலர் (Night Watchman)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2 (காஞ்சிபுரம் – 1, திண்டுக்கல் – 1)

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சியின்மை. அதாவது 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: தொழிலாளர் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf மற்றும் https://hrce.tn.gov.in//resources/docs/hrcescroll_doc/104/document_1.pdf என்ற இணையதளப் பக்கங்களில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்டு எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

காஞ்சிபுரம் முகவரி : இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 20/நெ.11 ஏ.கே.தங்கவேலர் தெரு, காஞ்சிபுரம் – 631501.

திண்டுக்கல் முகவரி : இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, பிளாட் எண் – 49, M.R.S. நகர், சீலப்பாடி அஞ்சல், திண்டுக்கல் – 624005.

விண்ணப்பிக்க கடைசி தேதி

காஞ்சிபுரம் : 15.04.2022

திண்டுக்கல் : 22.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.

காஞ்சிபுரம் : https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf

திண்டுக்கல் : https://hrce.tn.gov.in//resources/docs/hrcescroll_doc/104/document_1.pdf

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu hrce jc office recruitment 2022 apply soon