எஸ்எஸ்சி தேர்வுகள்: 1,157 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

எஸ்எஸ்சி கட்டம்- VIII / 2020 / தேர்வு பணி அறிவிப்பின் மூலம் 245 அரசு பிரிவுகளில் 1157 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன

SSC Phase-VIII/2020/Selection Posts
SSC Phase-VIII/2020/Selection Posts

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) கட்டம்- VIII / 2020 / தேர்வு பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 245 அரசு பிரிவுகளில் 1157 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ssc.nic.in என்ற அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இதற்கான அறிவிப்பை பார்வையிடலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 21ம் தேதி முதல் துவங்கியுள்ளது. விண்ணப்பிக்க மார்ச் 20 கடைசி தேதி.

எஸ்எஸ்சி நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஒருவர் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார். கணினி அடிப்படையிலான இந்த தேர்வு ஜூன் 10 முதல் 12 வரை நடைபெறும்.

அப்ஜெக்டிவ் வகை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.

ஒரு மணி நேரம் நடக்கும் பிரிலிம்ஸ் தேர்வில் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.50 நெகட்டிவ் மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வுடன் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு தயாராக முடியுமா?

கல்வி: கல்வித் தகுதி, பணியின் அடிப்படையில் மாறுபடுகிறது. சில பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு இருந்தால் போதுமானது, பல பணிகளுக்கு பட்டப் படிப்பு அவசியம்.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

வயது: விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க தகுதி பெற குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பணிகளுக்கான உயர் வயது வரம்பு 25, பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளுக்கான உயர் வயது வரம்பு 30 .

மேலும், இடஒதுக்கீடு பிரிவு தேர்வர்களுக்கு (அரசு விதிகளின்படி) உயர் வயது வரம்பில் தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

உயர் வயதில் தளர்வு: 

 

விண்ணப்பக் கட்டணம்:  விண்ணப்ப கட்டணமாக ரூ .100 வசூலிக்கப்படும். பெண்கள்  மற்றும் எஸ்சி, எஸ்.டி, பி.டபிள்யூ.டி,முன்னாள் இராணுவத்தினர் போன்ற பிரிவைச் சேர்ந்த தேர்வர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ssc phase viii 2020 selection post ssc job recuritment

Next Story
ஸ்டான்லி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!வேலைவாய்ப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com