/tamil-ie/media/media_files/uploads/2019/01/Untitled-1.jpg)
SSC Recruitment 2019
SSC Recruitment 2019 : ஸ்டெனோகிராபர் க்ரேட் சி மற்றும் க்ரேட் டி தேர்வு எழுதியவர்களுக்கான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வு முடிவுகள் வெளியாது குறித்தும், செலக்சன் போஸ்ட் தேர்வு எழுதுபவர்களுக்கான அட்மிட் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது போன்றவற்றிற்கான முக்கியமான அறிவிப்பினையும், தங்களின் அதிகாரப்பூர்வ இணைய தளமான ssc.nic.in. -யில் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : CISF Recruitment 2019 : கான்ஸ்டபிள் வேலை.. ஆண், பெண் இருவருக்கும் வாய்ப்பு!
SSC Recruitment : Selection Post Examinations Phase-VI /2018:
செலக்சன் போஸ்ட் தேர்வு பகுதி 6ல் பங்கேற்றவர்கள் தங்களின் அட்மிசன் சான்றிதழ்களை இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மாநிலத்தின் எந்த பகுதிகளில் தேர்வு எழுதி விருப்பம் தெரிவித்தீர்களோ, அதனை அந்த பதிவு செய்து அட்மிசன் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
SSC Recruitment 2019 : Recruitment of Stenographer Grade ‘C’ & ‘D’ 2017:
ஸ்ட்னோகிராபர் கிரேட் சி மற்றும் டி தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 28-11-2018, 10-12-2018 ஆகிய தேதிகளில் வெளியானது. இறுதி முடிவுகள் 29-03-2019 அன்று வெளியிடப்படும் என்றும் இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.