தமிழகத்திற்கு என மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அறிவித்தது. அதன்படி குழு அமைக்கப்பட்டு, கல்விக் கொள்கையை உருவாக்கும் பணி நடைபெறுகிறது. இதில் ஒரு பகுதியாக, பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பொது தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.
இந்த கருத்துக்கேட்பு கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நாளை மாநில கல்விக்கொள்கை தொடர்பான கருத்துக் கேட்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: கோவை அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி: நடவடிக்கை உறுதி என அதிகாரி தகவல்
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; திருச்சி மாவட்டத்தில் நாளை 11-ம் தேதி மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு :- அந்தநல்லூர் - ஸ்ரீரங்கம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லால்குடி - நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் - அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, மணிகண்டம் - சோமரசம்பேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி, மணப்பாறை- ஜீவன் கல்வியியல் கல்லூரி, மருங்காபுரி - கோவில்பட்டி விடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முசிறி - எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி, புள்ளம்பாடி - குழந்தை யேசு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி - தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, திருவெறும்பூர் - பாய்லர் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் – கொங்கு நாடு (பி.எட்) கல்லூரி, தா.பேட்டை - சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உப்பிலியபுரம் - எரகுடி ஆர்.எஸ்.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி - ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil