பொறியியல் மாணவர்களுக்கான லிங் நிலுவைத் தேர்வுகளை ரத்து செய்யும் தமிழக அரசின் உத்தரவு விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், அரியர்களை க்ளியர் செய்யாத மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் AICTE (தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில்) புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியது.
திருச்சி வழியாக 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு பொதுநல மனுக்களுக்கு AICTE தனது பதிலை சமர்ப்பித்தது.
"மாணவர்கள் தேர்வுகள் எழுதாமல் அடுத்த ஆண்டுக்கு செல்ல கவுன்சில் அனுமதிக்கவில்லை. நிலுவையில் இருக்கும் அரியர்களை க்ளியர் செய்ய தவறிய மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது. இது தொழில் துறையினருக்கும் ஏற்கத்தக்கதல்ல” என்று AICTE-ன் தெற்கு மண்டல அதிகாரி எம்.சுந்திரேசன் கூறினார்.
தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வு இல்லாமல் அடுத்த ஆண்டுக்கு மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய சுற்றறிக்கை அனுப்பியது யுஜிசி. அதுவும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிப்பைத் தொடர வேண்டும் எனவும் அந்த கவுன்சில் தெரிவித்தது. செப்டம்பர் 8-ம் தேதி, நிலுவைத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான தனது முடிவை மாநில அரசு நியாயப்படுத்தியதுடன், இந்த முடிவு யுஜிசி விதிமுறைகளை மீறாது என்றும் வாதிட்டது.
“பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் இந்த சட்டத்தின் கீழ் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரத்திடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துகிறது. யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முரணாக இல்லாவிட்டால், உச்சநீதிமன்றம் கூட இந்த சட்டத்தின் கீழ் மாநில அதிகாரத்தின் அத்தகைய உரிமைகளையும் அதிகாரங்களையும் உறுதி செய்துள்ளது” என்று வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயணன் கூறினார்.
இந்த உத்தரவு எந்த யுஜிசி விதிமுறைகளுக்கும் முரணாக இல்லை. யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதித் தேர்வுகளை மட்டுமே ரத்து செய்ய முடியாது, என்றார்.
முன்னதாக, பலகுருசாமியின் வழக்கறிஞரான வக்கீல் இ.விஜய் ஆனந்த், பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இத்தகைய அதிகாரங்கள் உள்ளன, மாநில அரசுகளுக்கு அல்ல என்று வாதிட்டார். பாலகுருசாமியின் கூற்றுப்படி, இந்த முடிவு, தேர்வுகளை க்ளியர் செய்ய கடினமாக உழைத்த நல்ல மற்றும் திறமையான மாணவர்களை மனச்சோர்வடையச் செய்யும்.
Tamil News Today Live : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!
அரசாங்க உத்தரவு மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும். இது திறமையான மாணவர்களின் நற்பெயர், நம்பகத்தன்மை, வாய்ப்புகள் மற்றும் கல்வியின் தரம் ஆகியவற்றை மோசமாக பாதிக்கும் என்றும் அவர் வாதிட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”