/tamil-ie/media/media_files/uploads/2020/10/New-Project-2020-10-01T214248.942.jpg)
Tamil News Today unlock5 : தமிழகத்தில் “ஒரே நாடு-ஒரே ரேசன்” திட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மதுபான பார்கள், திரையரங்குகள் திறக்க அனுமதியளித்து புதுச்சேரி அரசு உத்தரவு. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
குடியரசு தலைவரின் வளமான பார்வையும், அறிவும் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து என புகழாரம்.
ஹாத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காணொலி மூலம் பேசினார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today : முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி. போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைக் கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வாயில் முன்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 3 முதல் பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல் காந்தி கிசான் யாத்ரா மேற்கொள்வார் என்று காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற கிளை லக்னோ நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. மாநில அரசு, காவல்துறை அக்டோபர் 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசாத் சமாஜ் கட்சி தலைவரும் பீம் சேனா தலைவருமான சந்திரசேகர் ஆசாத், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உ.பி மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் தோல்வியுற்றதாகக் குற்றம் சாட்டினார். அதனால், உ.பி.யில் கவர்னர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சஹரன்பூரில் உள்ள தனது வீட்டில் ஒரு தர்ணா ஒன்றைத் தொடங்கியுள்ளதாக ஆசாத் கூறினார். அங்கு அவர் வீட்டுக் காவலில் வைக்க உள்ளூர் போலீஸாரால் புதன்கிழமை உத்தரவிடப்பட்டது.
“என் வீட்டில் நான் ஒரு தர்ணாவில் அமர்ந்திருக்கிறேன். அநீதியை பொறுத்துக் கொள்ள முடியாது. உத்தரபிரதேசத்தில் தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. குற்றவாளிகளைப் பாதுகாத்து, மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்து வரும் ஹத்ராஸின் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் மற்றும் எஸ்.எஸ்.பி. இதுபோன்ற தகுதியற்றவர்களிடமிருந்து ஒருவர் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்” என்று சந்திரசேகர் ஆசாத் ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி.யில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது தடுத்த உ.பி காவல்துறையையும் பாஜக அரசின் நடவடிக்கையையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார்.
“ராகுல் காந்தி ஹத்ராஸ் செல்வதற்கான அனைத்து ஜனநாயக உரிமையும் அரசியலமைப்பு சுதந்திரமும் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கச் செல்வதைத் தடுப்பது அனைத்து ஜனநாயகக் கொள்கைகளுக்கும் எதிரானது.
"இதை ஒரு ஜனநாயக சமூகம் அனுமதிக்க முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று விஜயன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். நீர் மேலாண்மையை பெண்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் கூட்டு பாலியல் தாக்குதல் மூலம் 19 வயது தலித் பெண் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் காங்கிரஸ் தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். ஹத்ராஸ் கூட்டு பாலியல் படுகொலையைக் கண்டித்து முழ்க்கமிட்டனர்.
கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினத்தன்று விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் ரூ.40,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “அகில இந்தியத் தலைவர் என்றும் பாராமல் பிடித்துத் தள்ளி மரியாதைக் குறைவாக நடத்துவது மனித உரிமைகளுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது. ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.” என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் ஹத்ரஸ் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார் ராகுல். அவர் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்
அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது . தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், வரும் 16ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது இத்திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
செங்கல்பட்டு பணிமுனையில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் குறைவாக இருப்பதால், விதிகளை மீறி பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்ற நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஓட்டுநர் நடத்துனர்களுக்கு பணி வழங்க இயலாமல், வருகைப்பதிவேட்டில் விடுப்பு என பதிவேற்றம் செய்வதாக குற்றம்சாட்டினர். போராட்டம் காரணமாக, விழுப்புரம் கோட்ட பேருந்துகளை தவிர்த்து, சென்னை மாநகர பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் . தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு . பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையாக 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து . மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் . குடியரசு தலைவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், தேசத்திற்கு நீண்ட நாள் சேவையாற்ற வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் ராம.கோபாலன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். உடலில் லேசான மாற்றங்கள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுக அறிவுறுத்துகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights