Tamil News Highlights: எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம் – மு.க ஸ்டாலின்

Tamil News Today : கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி இன்றுடன் நிறைவு!

By: Sep 30, 2020, 10:45:24 PM

Tamil News Today: யு.பி.எஸ்.சி தேர்வை தள்ளிவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்.

உலகிலேயே மிக மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாக பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 7000 கன அடியில் இருந்து 8500 கன அடியாக அதிகரிப்பு.

நேற்றைய போட்டியில் டெல்லி அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!
21:37 (IST)30 Sep 2020
எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம் - மு.க ஸ்டாலின்

எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம்! அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த  பாபர் மசூதி வழக்கில் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய சிபிஐ பாஜக அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்தார்.   

21:19 (IST)30 Sep 2020
5 வது கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் முடக்கநிலை நீக்கத்துக்கான புதிய  வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஐந்தாவது கட்ட முடக்கநிலை நீக்க தளர்வுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. திரையரங்குகள், மல்டிபிளெஸ்க்கள் ஆகியவை 50 சதவீத இருக்கைகளை நிரப்பும் வகையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல், பள்ளிகள் திறக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

19:43 (IST)30 Sep 2020
இராம.கோபாலன் மறைவெய்திய செய்தி வேதனை அளிக்கிறது - முதல்வர்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர்  இராம.கோபாலன் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இராம.கோபாலன் அவர்களது பிரிவால்வாடும் அவரது இயக்கத் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.  

18:37 (IST)30 Sep 2020
பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? - கமல்ஹாசன் கேள்வி

நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் தெரிவித்தார்.  

18:35 (IST)30 Sep 2020
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - அமைசச்சர் சீனிவாசன்

முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.  

18:33 (IST)30 Sep 2020
தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,659 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,659 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா நோய்த் தோற்றால் 67 பேர் உயிரிழந்தனர்.  

17:32 (IST)30 Sep 2020
வருமான வரித் தாக்கல் அவகாசம் நவ. 30 வரை நீட்டிப்பு

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய வருமான வரித்துறை தெரிவித்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

16:52 (IST)30 Sep 2020
இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் மரணம்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மருத்துவமனையிலேயே இன்று மரணம் அடைந்தார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

16:00 (IST)30 Sep 2020
பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு- ஸ்டாலின்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், ‘பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து, சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு. மொத்த மசூதியும் திட்டமிட்டே இடித்துத் தள்ளப்பட்டுள்ளது' என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிரூபிக்க முடியாத‌து சி.பி.ஐ.யின் தோல்வி’ என குறிப்பிட்டிருக்கிறார்.

15:22 (IST)30 Sep 2020
சாத்தான்குளம் வழக்கு- ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ மீண்டும் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

15:05 (IST)30 Sep 2020
கிராமசபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக- ஸ்டாலின்

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கூடுகிற அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

14:00 (IST)30 Sep 2020
புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம்

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக ராஜேஷ் தாஸ் நியமனம். இவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

13:49 (IST)30 Sep 2020
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளனர்.

13:37 (IST)30 Sep 2020
யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க மறுப்பு

கொரோனா, மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவு வெளியானது. அதில், தேர்வுகளை ஒத்திவைப்பதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

13:26 (IST)30 Sep 2020
நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது - ராஜ்நாத் சிங்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 32 பேரையும் நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து, "காலதாமதமானாலும் நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது!" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

13:03 (IST)30 Sep 2020
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம் . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் . இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற முடியும். 

12:54 (IST)30 Sep 2020
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி உமாபாரதி எல்.கே.அத்வானி உள்பட 6 பேர் காணொலியில் ஆஜர் பாபர். மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பை வாசித்து வருகிறார் . பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல . சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கருத்து.  எல்.கே.அத்வானி உட்பட 6 பேரை தவிர மற்ற அனைவரும் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்.  யோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இந்நிலையில், அனைவரும் விடுதலை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

12:50 (IST)30 Sep 2020
ஏஐசிடிஇ பதில் மனு!

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு எதிரானது ஏஐசிடிஇ பதில் மனு தாக்கல். 

12:49 (IST)30 Sep 2020
அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ்!

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் 256வது கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்பு . நேற்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நிலையில் இன்று ஓ.பி.எஸ் பங்கேற்றுள்ளார். 

12:48 (IST)30 Sep 2020
நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு!

நீட் தேர்வின்போது தாலி, கம்மல் உள்ளிட்டவற்றை அகற்றும் விதிமுறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

11:37 (IST)30 Sep 2020
பாபர் மசூதி இடிப்பு வழக்கு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம்

11:15 (IST)30 Sep 2020
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு!

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு

11:15 (IST)30 Sep 2020
திடக்கழிவு மேலாண்மை திட்டம்!

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. 

11:14 (IST)30 Sep 2020
செல்வம் ஆலோசனை. சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன்!

2வது நாளாக ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை. சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 

10:01 (IST)30 Sep 2020
ஸ்டாலின் கொரோனா சோதனை!

சென்னை அறிவாலயத்தில், நேற்று(செப்.,29) தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தலைமை நிலைய செயலர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, மேலாளர்கள் ஜெயகுமார், பத்மநாபன் மற்றும் ஊழியர்கள் உட்பட, 10 பேருக்கு, தனியார் மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள், தொற்று பரிசோதனை செய்தனர். இதில், ஸ்டாலினுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Tamil News : 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு.வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா உறுதியானது. உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்.

நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் . 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Web Title:Tamil news today live tn lockdown covid19 venkaiah naidu admk ops dmk stalin babri demolition case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X