Tamil News Highlights : ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் – கனிமொழி

Tamil Nadu, Chennai Latest News: முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!

By: Sep 29, 2020, 10:42:10 PM

Tamil News Today: இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பாக இந்த ‘லைவ் ப்ளாக்’ அமைகிறது. முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!

திங்கட்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழுவின் தொடர் காட்சிகளை இன்னும் காண முடிகிறது. சென்னையில் செவ்வாய்க் கிழமை காலை பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படும்’ என நேற்று கே.பி.முனுசாமி கூறியதை உறுதி செய்தார். வேளாண் மசோதாக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை காலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர். செயற்குழு நிகழ்வுகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நகர்வை ஓபிஎஸ் தரப்பு எப்படி செயல்படுத்துவது? என்பது குறித்தும் பேசியிருக்கலாம் என தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Live Blog
Tamil Nadu, Chennai Latest News: முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!
22:06 (IST)29 Sep 2020
ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - கனிமொழி

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் மீதமுள்ள இடங்களில் அகழாய்வு நடத்தப்பட வேண்டும். முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.   

21:37 (IST)29 Sep 2020
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   

 
20:25 (IST)29 Sep 2020
ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது - விராட் கோலி

ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது. இந்த கொடூர குற்றத்தை செய்த குற்றவாளிகள் அனைவரும் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவார்கள் என்று நம்புகிறேன் என விராட் கோலி தனது ட்விட்டரில் தெரிவித்தார்செப்டம்பர் 14 ஆம் தேதிஉத்திரபிரேதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு உயர் சாதி ஆண்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 19 வயது தலித் பெண் புதுடெல்லி மருத்துவமனையில் இன்று பலியானார். 

மேலும், விவரங்களுக்கு  

19:19 (IST)29 Sep 2020
தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்படுகிறது. மேலும், திரையரங்கு, நீச்சல்குளம், சுற்றுலாத்தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீட்டிப்பு.  

19:16 (IST)29 Sep 2020
துணை முதல்வருடன் அமைச்சர் உதயக்குமார் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துய் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார்.  

18:47 (IST)29 Sep 2020
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,501 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,501 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.58% குணமடைந்துள்ளனர்.

18:17 (IST)29 Sep 2020
இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் சாதனங்கள்: 2,290 கோடி ரூபாய் ஒதுக்கீடுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு 2,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இவற்றை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

18:16 (IST)29 Sep 2020
தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று – 70 பேர் பலி

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943  ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர்.  

18:16 (IST)29 Sep 2020
தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று – 70 பேர் பலி

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943  ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர்.  

17:30 (IST)29 Sep 2020
எஸ். பி. வேலுமணி முதல்வரை சந்தித்து பேசினார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி சந்தித்து பேசினார்.  

17:28 (IST)29 Sep 2020
திருவண்ணாமலை புரட்டாசி மாத பெளர்ணமி கிரிவலத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் புரட்டாசி மாத பெளர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

16:18 (IST)29 Sep 2020
கனிமொழி, ஆ.ராசா மீதான வழக்கு; அக். 5 முதல் தினமும் விசாரணை

2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த வழக்கில் திமுக.வை சேர்ந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

16:01 (IST)29 Sep 2020
இரட்டை இலை வழக்கு; சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. டிடிவி தினகரன் உள்பட 9 பேர் குற்றம் சாட்டப்பட்ட அந்த வழக்கில் 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டசுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

15:55 (IST)29 Sep 2020
மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் குறித்து காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடந்த நிலையில், பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடந்தது. இதன் முடிவில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14:10 (IST)29 Sep 2020
தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், இடைத்தேர்தலை தவிர்க்கிறது தேர்தல் ஆணையம்.

13:15 (IST)29 Sep 2020
ஓபிஎஸ்-ஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்திப்பு

துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை கடந்தாண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் இன்று சந்தித்தார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஓபிஎஸ் மூத்த நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன் வந்து சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

12:52 (IST)29 Sep 2020
10, 12-ம் வகுப்பு பள்ளித் திறப்பு- முதல்வர் முக்கிய அறிவிப்பு

மருத்துவக் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளித் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் இன்று தெரிவித்தார்.

12:32 (IST)29 Sep 2020
ஓபிஎஸ் ஆலோசனை நிறைவு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் நடத்திய அதிகாரபூர்வமற்ற ஆலோசனை நிறைவு பெற்றது. நேற்றைய செயற்குழு நிகழ்வுகள் குறித்து இதில் பேசியதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

12:26 (IST)29 Sep 2020
மெரினா கடற்கரை திறப்பு எப்போது?- சென்னை உயர் நீதிமன்றம்

பொது முடக்கம் முடிந்து மற்றப் பணிகள் சகஜமான பிறகும் சென்னை மெரினா கடற்கரை இன்னும் பொதுமக்களுக்கு திறந்து விடப்படவில்லை. மெரினா கடற்கரை திறப்பு எப்போது? என அக்டோபர் 5-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

11:58 (IST)29 Sep 2020
டீசல் விலை குறைந்தது

சென்னையில் இன்று பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமல் லிட்டர் ரூ.84.14-க்கும், டீசல் விலை 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.76.10 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

11:47 (IST)29 Sep 2020
விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

11:44 (IST)29 Sep 2020
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

பொதுமுடக்கம் நாளையுடன் முடியவிருக்கும் சூழலில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். பொதுமுடக்க தளர்வுகளால் கொரோனா பரவல் அதிகரிக்கிறதா? மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்து இந்த ஆலோசனை நடக்கிறது.

துணை முதல்வர் ஓபிஎஸ் இதில் பங்கேற்கவில்லை. அவர், தனது இல்லத்தில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார்.

திங்கட்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றன. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் வெளிப்படையாக இபிஎஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓபிஎஸ் தரப்புக்கு செயற்குழுவில் பெரிதாக ஆர்வம் இல்லை. கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘அக்டோபர் 7-ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு உறுதி’ என்றார். அதற்கு முன்பாக செப்டம்பர் 30-ல் மூத்த தலைவர்கள் கலந்து பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Web Title:Tamil news today live tamil nadu chennai latest news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X