Tamil Nadu HSC +2 Results: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியாகின. மொத்தம் 91.03 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பிளஸ் 2 ரிசல்ட்டை ஆன் லைனில் செக் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை அதாவது இன்று 19-ம் தேதி வெளியாகின. தேர்தலுக்கு மறுநாளே மாநில கல்வித் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் எதிர்கொள்கிறார்கள். Read More: Tamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி!
Tamil Nadu Class 12th Result 2019- தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
TN HSC Plus 2 result 2019: பிளஸ் டூ வகுப்பு முடிவை எவ்வாறு தெரிந்துக் கொள்வது?
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
கடந்த வருடம் 2018-ல் பிளஸ் டூ தேர்வில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களில் 91.1% தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவிகள் 94.1 விழுக்காடும், மாணவர்கள் 87.7 விழுக்காடும் தேர்ச்சியடைந்திருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பிளஸ் டூ தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது.
How to check TN Plus 2 results: தமிழ்நாடு பிளஸ் 2 ரிசல்ட்
அதிகாரப்பூர்வ தளமான tnresults.nic.in ஐ விசிட் செய்யவும்.
அங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.
பதிவெண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
இதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.