Tamil Nadu HSC +2 Result 2019 Live: பிளஸ் டூ ரிசல்ட், மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.

TN HSC +2 Result 2019: தமிழ்நாடு, புதுவையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியாகின்றன. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு இது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ந்தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக தேர்வு முடிவுகள் பள்ளிகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

Tamil Nadu HSE +2 Result 2019: பிளஸ் டூ தேர்வு முடிவுகளை ஆன் லைனில் ‘செக்’ செய்வது எப்படி?

மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படுகிறது. ஆன் லைனிலும் தேர்வுத் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

Live Blog

Tamil Nadu HSE +2 Result 2019 Live, TN Class 12th Result 2019 Live Updates: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

13:25 (IST)19 Apr 2019
TN Plus Two Results: மாவட்ட வாரியாக

திருவள்ளூர் – 76.14%திருவாரூர் – 78.62%வேலூர் – 79.31%காரைக்கால் – 80.05 %கிருஷ்ணகிரி – 80.29%காஞ்சிபுரம் – 80.6%கடலூர் – 80.85%விழுப்புரம் – 81.15%புதுச்சேரி – 81.21%நாகை – 82.44%திண்டுக்கல் – 83.62%திருவண்ணாமலை – 83.95%உதகை – 84.29%அரியலூர் – 84.72%தருமபுரி – 84.85%சேலம் – 85.29%மதுரை – 85.81%தஞ்சை – 86.21%தேனி – 87.39%புதுக்கோட்டை – 87.43%சென்னை – 87.54%ராமநாதபுரம் – 88.09%கோவை – 88.58%திருச்சி – 88.6%சிவகங்கை – 89.23%தூத்துக்குடி – 89.36%விருதுநகர் – 89.4%திருநெல்வேலி – 89.8%கரூர் – 90.57%நாமக்கல் – 90.6%திருப்பூர் – 91.51%பெரம்பலூர் – 91.8%ஈரோடு – 92.38%கன்னியாகுமரி – 92.64%

12:15 (IST)19 Apr 2019
TN Plus Two Results: அடுத்து என்ன படிக்கலாம்?

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற தீவிர யோசனையில் மாணவர்கள்

10:43 (IST)19 Apr 2019
Tamil Nadu Plus 2 Results: அரசு உதவி பெறும் பள்ளிகள்

பிளஸ் டூ தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.64 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளன. 

10:38 (IST)19 Apr 2019
Tamil Nadu HSC +2 Board Exam Results: பள்ளி வாரியாக

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இருபாலரும் படிக்கும் பள்ளிகள் 91.67 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.75 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.47 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. 

10:33 (IST)19 Apr 2019
TN Plus Two Results: அரசு பள்ளி Vs தனியார் பள்ளி

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 84.76 சதவீதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 98.26 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். 

10:19 (IST)19 Apr 2019
TN Plus Two Results: 34 கைதிகள் தேர்ச்சி

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து தேர்வெழுதிய கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

10:12 (IST)19 Apr 2019
TN HSC Result: பாடவாரியாக தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், பாட வாரியான தேர்ச்சி விகிதத்தையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

தமிழ் - 94.12%

ஆங்கிலம் - 93.83%

கணினி அறிவியல் - 95.27%

இயற்பியல் - 93.89%

உயிரியல் - 96.05%

வேதியியல் - 94.88%

09:57 (IST)19 Apr 2019
Tamil Nadu Plus 2 Results: மாணவர்களை பின்னுக்குத் தள்ளிய மாணவிகள்

பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.07% அதிக தேர்ச்சியடைந்துள்ளனர். 

09:52 (IST)19 Apr 2019
Tamil Nadu HSC +2 Board Exam Results: அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

பிளஸ் டூ தேர்வில் 84.76 சதவீத அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியடைந்திருக்கின்றன. 

09:49 (IST)19 Apr 2019
Tamil Nadu Plus 2 Results: மாணவ மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் எப்போதும் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். மாணவிகள் 93.64 விழுக்காடும், மாணவர்கள் 88.57 விழுக்காடும் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். 

09:37 (IST)19 Apr 2019
TN HSC +2 Results: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தமிழக பள்ளிகளில் மொத்தம் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்றிருக்கின்றன. 

09:35 (IST)19 Apr 2019
TN Plus Two Results: கணிதத்தில் அதிகளவு தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வில் அதிகபட்சமாக கணித பாடத்தில் 96.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

09:34 (IST)19 Apr 2019
Tamil Nadu HSC +2 Board Exam Results: முதலிடத்தில் திருப்பூர்!

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதில் 95.37% சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 95.23% சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டமும், 95.15 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டமும் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. 

09:28 (IST)19 Apr 2019
Tamil Nadu Plus 2 Results: வெளியானது +2 தேர்வு முடிவுகள்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

09:25 (IST)19 Apr 2019
TN HSC +2 Results: சிறப்பு துணைத்தேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். 

09:23 (IST)19 Apr 2019
Tamil Nadu HSC +2 Board Exam Results: மதிப்பெண் பட்டியல் பெறுவது எப்படி?

வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதற்கு, www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

09:21 (IST)19 Apr 2019
TN Plus Two Results: மதிப்பெண் விபரங்கள்

மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பாடம் வாரியாக ஆன்லைன் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ரா தேவி தெரிவித்திருக்கிறார். 

09:11 (IST)19 Apr 2019
Tamil Nadu HSC +2 Board Exam Results: ரேங்க் முறை

கடந்த வருடம் முதல் ரேங்க் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2017 வரை மாநிலத்தில் முதல் 3 இடங்களுக்கு மாணவர்களிடையே அதிக போட்டியிருக்கும். ஆனால் தற்போது கிரேட் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

08:54 (IST)19 Apr 2019
TN Plus Two Results: புனித வெள்ளியில் தேர்வு முடிவுகள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் தினத்தை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் பெரிய வெள்ளியான இன்று அரசு விடுமுறை விடப்படுகிறது. அதனால் இந்நாளில் தேர்வு முடிவு வெளியிடுவதை பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது, ஆனால் அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. 

08:47 (IST)19 Apr 2019
Tamil Nadu HSC +2 Board Exam Results: விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டல்

மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு ஏப்ரல் 22 முதல் 24 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.  

08:36 (IST)19 Apr 2019
Tamil Nadu Plus 2 Results: எஸ்.எம்.எஸ் வசதி

தேர்வெழுதும் போது, மாணவர்கள் குறிப்பிட்டிருக்கும் செல்ஃபோனுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். 

08:26 (IST)19 Apr 2019
TN +2 Results : காத்திருக்கும் மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுக்காக மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

08:14 (IST)19 Apr 2019
TN HSC Result

பிளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in  மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய தளங்களில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். 

08:03 (IST)19 Apr 2019
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.  tnresults.nic.in என்ற தளத்தில்  மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். 

Tamil Nadu HSE +@ Result 2019 Live, TN Class 12th Result 2019 Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன. எனவே பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

×Close
×Close