தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் (DMER) தமிழ்நாடு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023 கவுன்சிலிங் பதிவு தேதியை நீட்டித்துள்ளது. கவுன்சிலிங் செயல்முறைக்கு பதிவு செய்ய, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான - https://tnmedicalselection.net/ இல் விண்ணப்பிக்கலாம்.
"மாணவர்களிடமிருந்து கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வந்ததால், 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான MBBS / BDS படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான செயல்முறையை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: NEET Counselling: எய்ம்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த கல்லூரிகளின் கட் ஆஃப் இங்கே
தமிழ்நாடு NEET UG 2023 கவுன்சிலிங்: விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு நிரப்புவது?
படி 1: தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்கிற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.- https://tnmedicalselection.net/
படி 2: முகப்புப்பக்கத்தில் MBBS மற்றும் BDS பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: முதலில் தகவல் குறிப்பேட்டைப் படித்துவிட்டு விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 4: இதற்குப் பிறகு, அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்படி விண்ணப்பப் படிவத்தைக் கிளிக் செய்யவும்.
படி 5: பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பல போன்ற உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
படி 6: பதிவு செய்தவுடன், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 7: கவுன்சிலிங் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
படி 8: கேட்கப்பட்ட அனைத்து கட்டாய ஆவணங்களையும் பதிவேற்றவும்
படி 9: நீட் கவுன்சிலிங் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும்
படி 10: எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப்பதிவு படிவத்தின் கடின நகலை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்போது ஜூலை 12, 2023 மாலை 5 மணி வரை கவுன்சிலிங் செயல்முறைக்கு விண்ணப்பிக்கலாம். முன்னதாக, விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 10 ஆகும்.
விண்ணப்பப் படிவக் கட்டணம் ரூ. 500 மற்றும் அதை இணையதளங்களில் உள்ள வங்கிப் பேமெண்ட் போர்டல் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சுற்று 1, மாப்-அப் சுற்று மற்றும் துணை சுற்றுக்கு பதிவு செய்யலாம். சுற்று 2 க்கு புதிய பதிவுகள் அனுமதிக்கப்படாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil