TN HSC +2 Result 2019: தமிழ்நாடு, புதுவையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியாகின்றன. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு இது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ந்தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக தேர்வு முடிவுகள் பள்ளிகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
Tamil Nadu HSE +2 Result 2019: பிளஸ் டூ தேர்வு முடிவுகளை ஆன் லைனில் ‘செக்’ செய்வது எப்படி?
மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படுகிறது. ஆன் லைனிலும் தேர்வுத் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
Live Blog
Tamil Nadu HSE +2 Result 2019 Live, TN Class 12th Result 2019 Live Updates: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
திருவள்ளூர் – 76.14%
திருவாரூர் – 78.62%
வேலூர் – 79.31%
காரைக்கால் – 80.05 %
கிருஷ்ணகிரி – 80.29%
காஞ்சிபுரம் – 80.6%
கடலூர் – 80.85%
விழுப்புரம் – 81.15%
புதுச்சேரி – 81.21%
நாகை – 82.44%
திண்டுக்கல் – 83.62%
திருவண்ணாமலை – 83.95%
உதகை – 84.29%
அரியலூர் – 84.72%
தருமபுரி – 84.85%
சேலம் – 85.29%
மதுரை – 85.81%
தஞ்சை – 86.21%
தேனி – 87.39%
புதுக்கோட்டை – 87.43%
சென்னை – 87.54%
ராமநாதபுரம் – 88.09%
கோவை – 88.58%
திருச்சி – 88.6%
சிவகங்கை – 89.23%
தூத்துக்குடி – 89.36%
விருதுநகர் – 89.4%
திருநெல்வேலி – 89.8%
கரூர் – 90.57%
நாமக்கல் – 90.6%
திருப்பூர் – 91.51%
பெரம்பலூர் – 91.8%
ஈரோடு – 92.38%
கன்னியாகுமரி – 92.64%
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதில் 95.37% சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 95.23% சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டமும், 95.15 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டமும் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.
வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு, www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் தினத்தை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் பெரிய வெள்ளியான இன்று அரசு விடுமுறை விடப்படுகிறது. அதனால் இந்நாளில் தேர்வு முடிவு வெளியிடுவதை பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது, ஆனால் அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights