தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குநரகம் (டி.என்.டி.ஜி.இ), பனிரெண்டாம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகளையும், பதினொன்றாம் வகுப்பு அரியர் தேர்வு முடிவுகளையும் (செவ்வாய்க்கிழமை) இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கிறது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
மீன் வறுவல் ரொம்ப ஈஸி… ஆனா, அந்த மசாலா இப்படி இருக்கணும்!
"பதிவெண்கள் பட்டியலில் இல்லை என்றால், மாணவர்களின் மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை. பட்டியலில் இடம் பெற்றவர்கள் தங்களது ரோல் நம்பர், மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்" என்று ஒரு அறிக்கையில் தேர்வு இயக்குநர் கூறியுள்ளார்.
பள்ளி கல்வித் துறை ஜூலை 16-ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு, ஸ்டேட் போர்டு தேர்வு முடிவுகளை அறிவித்தது. திருத்தப்பட்ட பாடத்திட்டம் மற்றும் புதிய வினாத்தாள் முறை காரணமாக, அறிவியல் பிரிவில் பெரும்பான்மையான மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களை பெற்றனர்.
இலவசமாக நெட்பிளிக்சில் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டுமா? இதோ வழிமுறை
கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற முக்கிய பாடங்களில் விடைத்தாள் நகலுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பல மாணவர்கள் உயிரியல் மற்றும் வர்த்தக பாடங்களிலும் விடைத்தாள்களை பெற முயன்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”