Spicy Fish Fry In Tamil: மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்களான ஒமேகா 3 இதில் உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர்: ஹீரோ வில்லனாகும் தருணம்
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது. சில வகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சரி இதெல்லாம் இருக்கட்டும். மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதனால் ஒரு காரசாரமான மசாலா மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை இங்கு குறிப்பிடுகிறோம்.
மீன் – அரை கிலோ (முள் இல்லாதது)
தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 12
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழம் – 1
வில்லி இவ்ளோ அழகா இருந்தா யாருக்குத் தான் பிடிக்காது?!
* மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கழுவிய மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்றாக பிரட்டி 30 நிமிடம் பிரிட்ஜில் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* அவ்வளவு தான் சுடச்சுட காரசாரமான மசாலா மீன் வறுவல் ரெடி!!!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Fish fry recipe tamil spicy masala fish fry at home
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!