தமிழ்நாடு காவல்துறையின் ஒரு பிரிவாக செயல்படும் Tamil Nadu Police Shorthand Bureau-வில் வேலை வாய்ப்பு குறித்த தகவல் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வெளியாகியது.
பணியின் பெயர்: ஜூனியர் ரிப்போர்ட்டர்ஸ்
பணியின் தன்மை: மாநில/மாவட்டம் அளவில் அரிசயல் கட்சிகள்/ சமூக அமைப்புகள் நடத்தும் பிரச்சாரம், பொதுக் கூட்டம் போன்றவைகளில் கலந்து கொண்டு, அதுகுறித்த அறிக்கைகளை உடனடியாக தயார் செய்து உயர்காவல் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். வேலை பொதுவாக இரவு நேரங்களில் இருப்பதால் ஆர்வமுலவர்கள் மட்டும் விண்ணபிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மோதலை ஏற்படுத்தும் படி பேசிய ரஜினி... பதில் அளிக்க காவல் ஆணையருக்கு உத்தரவு!
முக்கிய நாட்கள்:
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 1 மார்ச் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 மார்ச் 2020
தேர்வு நாள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி:
- 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
- கட்டாயம் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு அட்டவணை முடித்திருக்க வேண்டும்
முக்கிய குறிப்பு: உடல்தகுதி தேர்வு என்று எதுவும் இல்லை
ஹாய் கைய்ஸ் - பெண் வேடத்தில் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கீங்களா....: வைரலாகும் வீடியோ
தேர்வுமுறை:
திறன் அடிப்படையிலான தேர்வு, மற்றும் வாய்வழி தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்ச்சி செய்யப்படுகிறார்கள்.
காலி பணியிடங்கள்:
மொத்தம் : 37
விண்ணப்பம் செய்வது எப்படி?
நோட்டிபிகேஷனில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணபத்தை பூர்த்தி செய்து
The Chairman,
Selection Committee,
Police Shorthand Bureau,
HQ, 2nd Floor, Old Coastal Security Group Building,
DGP Office Complex, Mylapore, Chennai – 600004
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.